ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்

அறிவிப்புகள்: அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலய பொதுக்கூட்டம் 2.3. 25 அன்று மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது இதில் ஆலய திருப்பணிக்கான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் மேலும் 3 ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் இந்த தொகையை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இந்த தொகையை 15.3.25 அன்று முதல் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு கோவில் நிர்வாகம்

அன்புடையீர், அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தில் திருப்பணி நடக்க இருப்பதால் துவக்கமாக 10/13/2025 அன்று மணல் கம்பி இறக்கி வைக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ லக்ஷ்மி குபேரன் ஆலயம் - பள்ளித்தென்னல்

ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்

குபேரன், செல்வத்தின் கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படுபவர், குபேரா, குவேரா, வைஷ்ரவணன், தனேஸ்வரா, சர்வானுபூதி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள்.

தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்தி கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளைகளை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொது காரியங்களில்செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறிங்காமல் நிலைத்திருக்கும்.

குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.

மஹாலக்ஷ்மி

லக்ஷ்மி (Lakshmi) அல்லது திருமகள் அல்லது அலைமகள் அல்லது மலர்மகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

லட்சுமி வடிவங்கள்

அஷ்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது. செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.

முந்துதிரு - ஆதிலட்சுமி

மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சேல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.

செல்வத்திரு - தனலட்சுமி

பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.

தானியத்திரு - தானியலட்சுமி

வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.

வேழத்திரு - கஜலட்சுமி

கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள். இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

அன்னைத்திரு - சந்தானலட்சுமி

குழந்தைப்பேறு அருளும் திருமகள். கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

திறல்திரு - வீரலட்சுமி

வீரம், வலிமை, அருளுவாள். துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய எண்கரத்தினள்.

வெற்றித்திரு -விஜயலட்சுமி

யுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.

கல்வித்திரு - வித்யாலட்சுமி

அறிவையும் கலைகளில் வல்லமையும் தருபவள். வெண்துகிலுடுத்திய, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.